
சித்திரை மாத சில்லென்ற மழையின்
முதல் துளியாய் நீ.......!
சித்திரங்கள் உயிர் பெற்று சிரிக்கும்
முதல் புன்னஹையாய் நீ...!
உன் துளி புன்னஹையில் நான்
உறக்கமிழந்து என்
உருவம் மறந்தேன் !!!!
யாரிடம் கடன் வாங்கி இருக்கிறதோ
உன் புன்னஹை ........ இன்று
அதற்கு கந்து வட்டியாக
வாரி இரைகிறேன் நான்
என் வாத்தைகளை ........
தெரியவில்லை என் கற்பனைஹளுக்கு
நீ சிதறிவிடும் புன்னைஹைக்கு
உவமை வகுக்க
யாரோ என்று அறிமுகமாகி
நட்பிடம் அடிக்கலாம் தேடி
வார்த்தைகளில் தஞ்சம் புகுந்தோம்
விளக்கம் தெரியவில்லை உறவிற்கு
நீ என்னகானவள் என்பதை தவிர
உண்மை உறவுகளின் கேள்விக்கு
பதில் தெரியாமல் உலரும்
சொந்தகளுகிடையே எனக்காய்
கிடைத்தது உன் நட்பு
தெளிவான பதில் கொண்டு
உன் ஒரு நாள் நட்பில் உணர்ஹிறேன்
உயிர் காத்திருந்ததன் உணர்வை
எங்கோ என் மனதோரமாய் உயிர்
கொண்ட தவத்தை !!!!!!!!!!!

